Thursday, January 10, 2008

நாங்களும் கடற்கரை போனோம் - பாகம் இரண்டு

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுற்றுலாவுக்கான இடங்களிலொன்று Great Ocean Road.
இது விக்ரோரிய மாநிலத்தில் அமைந்துள்ளது. மெல்பேண் நகர்ப்பகுதியிலிருந்து அண்ணளவாக ஒன்றரை மணிநேர வாகனப்பயணத் தூரத்தில் இது தொடங்குகிறது.
பெயருக்கேற்றமாதிரி இதுவொரு கடற்கரைச் சாலை. இச்சாலை சில நூறு கிலோமீற்றர்கள் நீளத்தைக்கொண்டது. இச்சாலையின் வழியே ஏராளமான சுற்றுலாத்தளங்களுள்ளன. முக்கியமானவை கடற்கரைகள்தாம். இச்சாலையில் புகழ்பெற்ற பல கடற்கரைகளுள்ளன என்றாலும் இதன் நீளம் முழுவதும் ஏதாவதோர் இடத்தில் மக்கள் கடற்குளித்துக்கொண்டுதானிருப்பார்கள். இச்சாலை வழியே சுற்றுலா செல்வதாயின் முழுவிடங்களும் பார்க்க வேண்டுமானால் அண்ணளவாக நான்குநாட்களாவது தேவை. ஆங்காங்கே விலையுயர்ந்த தங்குமிட வசதிகளுள்ளன.

[சில தமிழ்ச்சினிமாப் படங்களில் இச்சாலையிலுள்ள சில சுற்றுலாத்தளங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நாங்கள் போவதற்கு இரண்டுநாட்களின் முன்பு சிலம்பரசன் ஒரு பாடற்காட்சியைப் படமாக்கினார்.]

கடந்த ஐந்தாம்நாள் நாம் இந்தக் கடற்கரைச்சாலையின் குறிப்பிட்ட தூரம்வரை சென்றிருந்தோம்.
இச்சாலையிலுள்ள ஐந்தாறு கடற்கரைகரைகளில் தங்கினாலும் மிகப்புகழ்பெற்ற கடற்கரையொன்றான Lorne கடற்கரையில்தான் குளித்தோம்.

நாம் முதலிற் சென்றது ஒரு நீர்வீழ்ச்சிக்கு.
இது Lorne கடற்கரைக்கு நேராக காட்டுக்குள் பத்து கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. கோடைகாலமாதலால் நீர் அதிகமில்லை. ஆனால் நீர்வீழ்ச்சியில் நேரடியாக நின்று குளிப்பதற்கு ஏதுவாக இருந்தது. இப்படம் நீர்வீழ்ச்சியிலிருந்து நூறுமீற்றர் தூரத்திலிருந்து எடுக்கப்பட்டது.


நாங்கள் நீர்வீழ்ச்சியில் நேரடியாக நின்று குளித்ததைக் கண்ட அவுஸ்திரேலிய நண்பர்கள் தாங்களும் வந்து கலந்துகொண்டனர். குளித்துவிட்டு வெளியேறும் அவர்களின் படத்தை மட்டும் இங்குக் காணலாம்.



நீர்வீழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒருமணித்தியாலம் வரை செலவிட்டபின் கடற்கரைக்கு வந்தோம்.

நாங்கள் பயணம் மேற்கொண்டது 05.01.2008 சனிக்கிழமை. அன்று வெப்பநிலை 38 தொடக்கம் 40 பாகை செல்சியஸ் வரை இருந்தது. எனவே எதிர்பார்த்தபடி மக்கள் வெள்ளம் கடற்கரையில் கரைபுரண்டோடியது.
ஊரில் நடக்கும் தேர்த்திருவிழா (நன்றி: யோகன் பாரீஸ்) போன்றிருந்த இடங்களைத் தவிர்த்து சற்று சனசந்தடி குறைந்த இடத்தை எமது குளிப்புக்காகத் தேர்ந்தெடுத்தோம்.
எம்மைத் தவித்து, அவ்விடத்துக் காட்சிகள் சில படங்களாகத் தரப்பட்டுள்ளன.












கடற்குளிப்பு முடிந்ததும் BBQ போட்டோம். நாங்கள் ஒழுங்காகச் சாப்பிட்டோமோ இல்லையோ சுற்றியிருந்தவர்களை எழுந்து ஓடவைத்துவிட்டோம். வேறொன்றுமில்லை, எமது மசாலாத்தூள், மிளகாய்த்தூள், இன்னிபிற சமாச்சாரங்கள் எரிந்த மணத்தால் வந்த வினை.

திரும்பிவரும்போது நாலைந்து கடற்கரைகளில் நின்று வேடிக்கைபார்த்து வந்தோம். இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் Geelong கடற்கரையில் காலாற நடந்துவிட்டுத் திரும்பினோம்.
கூட வந்த நண்பனொருவனுக்கு நீர்வீழ்ச்சியடியில் பல்லும் சொண்டும் உடைந்த சம்பவத்தை விட்டால் இனிதான, நிறைவான பயணம்.
~~~~~~~~~~~~~~~~~~
இங்குள்ள படங்கள் யாவும் என்னால் எடுக்கப்பட்டவை. எனவே படங்களில் என்னைத் தேடவேண்டாம்.

Labels: , , ,

Friday, December 28, 2007

நாங்களும் கடற்கரை போனோம் - பாகம் ஒன்று

நேற்று (27.12.2007) நாங்கள் கடற்கரையொன்றுக்குப் போனோம்.
மெல்பேணிலுள்ள மிகப்பிரபலமான st. Kilda Beach க்குத்தான் போனோம்.
எடுத்த படங்களெல்லாவற்றையும் வெளியிட முடியாததால் இரண்டொரு படங்களை மட்டும் வெளியிடுகிறோம்.

மக்களைக் கிட்டவாகக் காட்சிப்படுத்தியவற்றைத் தவிர்த்து, தூரத்தில், ஒருமுனையில் நிற்கும் சிலரைக் காட்சிப்படுத்திய படமிது.

கடற்குளித்துக் கரைதிரும்பும் ஒருவர்.

மனம் கேட்காமல் இன்னொரு படம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவ்விடுகையில் இருக்கும் நீதிகள்:

நீதி ஒன்று: மெல்பேணிலும் அழகான கடற்கரைகளுள்ளன; ஏராளமான மக்கள் நாளாந்தம் வந்து போகிறார்கள்.

நீதி இரண்டு: 'கனியிருப்ப காய்கவர்ந்தது போல' கடற்கரை பார்க்க இஞ்சயிருந்து ஆயிரம் கிலோமீற்றர்கள் தாண்டிப்போய் கடற்கரையில படுத்துக்கிடந்து (கடலுக்க இறங்கி உடம்பை நனைச்சாலும் பரவாயில்லை; மணலில இருந்து விடுப்புப் பாக்க என்ன கோதாரிக்கு இவ்வளவு தூரம் போகோணுமெண்டது எனக்கின்னும் விளங்கேல) எழும்பிவாறதுக்கு உண்டான கொழுப்பு இந்த வெயிற்காலத்தோடயாவது கரையக்கடவது.

**** சிட்னிக் கடற்கரை மெல்பேணிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீற்றர்கள்.
**** விளங்கப் புத்தியுள்ளவன் விளங்கட்டும்.
**** தொடர்பற்ற ஆக்கள் குறுக்குச் சூடுகளுக்க ஆப்பிட வேண்டாம்.

Labels: , ,

Tuesday, September 25, 2007

Escalator பழுதடைந்தால் என்ன செய்வது?


Broken Escalator - Watch more funny videos here

Labels:

Tuesday, July 31, 2007

புகைப்படப் போட்டிக்கு....

வலைப்பதிவர்களிடையே நடைபெறும் புகைப்படப் போட்டிகள் களிப்பூட்டுகின்றன.
இதற்கு முதல் நடந்த போட்டிகளைத் தவற விட்டுவிட்டேன்.

இப்போது நடப்பதில் கலந்து கொள்கிறேன்.

படத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
படத்துக்கான தலைப்பை நீண்ட நேரம் யோசித்தேன். எதேச்சையாகத் தோன்றியதை அப்பிடியே வைத்துவிட்டேன்.


'ஒரு கோதாரி உணர்ச்சியுமில்லை'

Labels:

Monday, May 14, 2007

கலப்பு நடனம் -1

சிறுமியொருத்தி சில நடன வகைகளைக் கலந்து ஆடுகிறாள்.
சரி, தவறு என்பவற்றுக்கப்பால் பார்க்க இரசிக்கும்படியாக இருக்கிறது.

அச்சிறுமிக்கு ஏற்படக்கூடிய களைப்பையும், அது எதுவுமே வெளித்தெரியாமல் அவள் ஆடுவதையும் நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. சிறந்த மூச்சுக்கட்டுப்பாடம் பயிற்சியுமின்றி இது சாத்தியமில்லை.

தமிழ்ப்பாட்டுக்கு ஆடுகிறார்கள். ஆனால் எல்லாமே இந்தி வாலாக்களாகத் தெரிகிறது.
பாடல்வரிகள் புரிந்துதான் ஆடுகிறார்களா?

Labels: ,

Tuesday, April 24, 2007

பரீட்சார்த்த நேயர் விருப்பம்

'சிஞ்சா மனுசி' கலையகம் அவுஸ்திரேலியாவிலும் தனது கிளையொன்றைத் தொடக்க நினைக்கிறது. தற்காலிகக் கலையகம் அமைக்கப்பட்டு பரீட்சார்த்தமாக 'நேயர் விருப்பம்' நிகழ்வொன்று VOIP நுட்பம் மூலம் நடத்தப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
அப்பரீட்சார்த்த ஒலித் தொகுப்பை இங்கு வழங்குகிறேன்.

நேயருடனான கலந்துரையாடலும் பின்னர், நேயர் கேட்ட பாடலும் ஒலிபரப்பாகின்றன.
கலந்துரையாடியவர்கள்: அவுஸ்திரேலியாவிலிருந்து வசந்தன், கனடாவிலிருந்து சினேகிதி.
(கவனமாப் பாருங்கோ, ஆக்களைவிட நாடுகள்தான் முக்கியம்).


இது சோதனையென்பதால், ஒலிப்பதிவிலும் அறிவிப்பிலும் குறைகளுள்ளன. விரைவில் களையப்படும்.
இந்த வேலைக்கு எந்த உள்நோக்கமுமில்லை என்பதை அறியத்தருகிறோம்.

Labels: ,

Saturday, April 21, 2007

சயந்தன் வீட்டுப்பூனைக்கு நடந்தது என்ன?

சயந்தனின் கொடுமை தாங்காமல் அவரின் வீட்டிலிருந்து பூனையொன்று தப்பிச்சென்றது வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 'பூனையின் வாக்குமூலம்' என்ற இடுகையில் பாதிக்கப்பட்ட பூனை தன் வாக்குமூலத்தைப் பதிந்திருந்தது.
அங்கிருந்து தப்பிய பூனைக்கு என்ன நடந்தது? அது என்ன செய்கிறது என்று அறிய பலர் ஆவலாயிருப்பீர்கள்.

எமது துப்பறியும் பிரிவு அப்பூனையைக் கண்டுபிடித்துவிட்டது.
அது இப்போது மிகமிக மகிழ்ச்சியாக ஆடிப்பாடி கொண்டாட்டமாக இருக்கிறது.
ஒரு கொடுமையாளனிடமிருந்து தப்பித்த மகிழ்ச்சியில் கொண்டாட்டமாக ஆடிப்பாடும் பூனையை மறைந்திருந்து படம்பிடித்தது எமது துப்பறியும்குழு.
அந்த காணொளிக் காட்சியை நீங்களும் கண்டுகளியுங்கள்.




அப்பூனையின் பாதுகாப்புக் காரணங்களுக்காக (வேறென்ன? தெரிந்தால் மீண்டும் அப்பூனை பழைய கொடுமைகளை அனுபவிக்க வேண்டிவருமென்பதுதான்) தற்போது அப்பூனை இருக்குமிடத்தைச் சொல்ல முடியாது.

Labels: