Friday, September 09, 2005

வன்னி வளம்.




இது வன்னியின் வளம் நிறைந்த முத்தையன்கட்டுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கைப் பிரதேசம்.

பட உதவி: கருணா

Comments on "வன்னி வளம்."

 

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said ... (September 09, 2005 4:55 PM) : 

என்னென்ன பயிரிடப்படுறது?

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (September 09, 2005 5:11 PM) : 

முதன்மைப் பயிரச்செய்கை இருபோக நெல்தான். பெரும்போகத்துக்கு (மாரி காலத்தில்) குளம் திறந்து விடப்படுவதில்லை. மழை பேய்க்காட்டினால்(ஏமாற்றினால்) தேவையான பகுதிகளுக்கு நீர் திறந்து விடுவார்கள்.
அவற்றைவிட சிறுபோக நெற்செய்கைக்கும், மரக்கறிச் செய்கைக்கும் கோடையில் நீர் திறந்து விடப்படும். நெல்லுக்கு அடுத்தபடியாகப் பயிரிடப்படுவது கச்சான்தான்.

மற்றும் மரக்கறிகள் என்று பார்த்தால் மரவள்ளி தான் முதன்மைப் பயிர். பிறகு கத்தரி, வெண்டி என்று நிறையச் செய்வார்கள்.
முன்பு புகையிலை செய்து பின்னர் தமிழீழப் பொருண்மியக் கழகத்தால் அது தடைசெய்யப்பட்டுவிட்டது.

 

Blogger இராம.கி said ... (September 09, 2005 5:34 PM) : 

கச்சான் என்றால் என்ன?

அன்புடன்,
இராம.கி.

 

Blogger கயல்விழி said ... (September 09, 2005 7:09 PM) : 

நேரில் பார்த்தால் அதன் அழகே தனி. படத்தில் கூட அழகாய் உள்ளது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வசந்தன்.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (September 09, 2005 7:38 PM) : 

இராம.கி,
கச்சான் என்பது உங்கள் ஊரின் நிலக்கடலையை.
எங்கள் ஊரில் நிலக்கடலையென்றால் யாருக்கும் தெரியாது.
காற்று வகைகளில், கச்சான் காற்றென்றும் ஒன்றுண்டு. தமிழகத்தில் இக்காற்றைக் குறிக்க எச்சொல் பயன்படுத்துவர்?
(அக்காற்றுக்கும் கச்சானுக்கும் என்ன தொடர்பென்று தெரியவில்லை)

 

Blogger G.Ragavan said ... (September 09, 2005 8:01 PM) : 

மிகவும் அழகான வயற்பகுதி. கண்களுக்கு விருந்து என்றால் மிகையில்லை.

கடலைக் காற்றா? கடல் காற்று என்று ஒன்று உண்டு. மாலையில் கடலிலிருந்து நிலத்திற்கு வீசும் காற்றுக்கு கடற்காற்று என்று பெயர்.

 

Blogger -/பெயரிலி. said ... (September 09, 2005 9:16 PM) : 

வசந்தன்,
கச்சான் (Kacang),
சம்பல் (Sambal),
இரம்புட்டான் (rambuttan) ஆகிய திசைச்சொற்கள் மலே(சியா), இந்தோனேசியா உபயம்.

அதேபோல, மிளகாய்க்கும் இலங்கையிலே கொச்சிக்காய் என்ற பெயருமுண்டு. கொச்சின் இலிருந்து ஆரம்பத்திலே வந்துகொண்டிருந்ததாலே, கொச்சின்+காய்-> கொச்சிக்காய் ஆகியது.
(பம்பாய் வெங்காயம் அடுத்தது ;-))

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (September 09, 2005 9:54 PM) : 

பெயரிலி,
தகவலுக்கு நன்றி.
நாங்கள் தனியே கடலை என்று சொல்வதில்லை.
ஏதாவதொரு பெயருடன்தான் கடலை என்ற சொல் வரும்.
கொச்சிக்காய் பற்றிய விளக்கம் முன்பும் கேட்டிருக்கிறேன். ஆனால் குறிப்பிட்டவொரு வகை மிளகாயை மட்டுமே அப்படிச் சொல்வோம். அந்தவகைதான் கொச்சினிலிருந்து வந்திருக்க வேண்டும்.
ஆனால் கச்சான் காற்று எண்டதும் மலே இந்தோ வரவாயிக்கச் சந்தர்ப்பமிருக்கா?
ஏனென்றால் கடற்றொழில்சார் சொல்லான கச்சான்காற்று முன்பிருந்தே இருந்திருக்குமோ என்று ஐயுறுகிறேன். வாடை, கொண்டல் என்பவை தொன்மைச் சொற்களென்றால் கச்சான் மட்டும் இடையில் செருகப்பட்டிருக்க வாய்ப்புக் குறைவாயிருக்கும்.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (September 09, 2005 9:57 PM) : 

ராகவன்,
நான் சொல்வது அந்தக் கடற்காற்றையன்று.

வாடை, கொண்டல், கச்சான், சோளகம் என்று 4 வகையான காற்றுக்களை எங்கள் மக்கள் கதைப்பார்கள். அவையொவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் தொடர்ச்சியாக வீசும். அவை வீசும் திசைகளைப் பொறுத்தே அவை பிரிக்கப்படுகின்றன. (வடமேல், தென்கீழ் பருவப்பெயர்ச்சிக் காற்றுக்கள் முறையே வாடை, சோளகம் என்று அழைக்கப்படும்.)

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (September 10, 2005 3:37 PM) : 

அண்ணே, திருநாளை புளொக்கர்,
நீங்கள் இந்தப் பேரில பின்னூட்டமிட்டுக் கனநாளாச்சு.
இப்ப கண்டதில சந்தோசம்.
அந்த மாதன முத்தாவிட்டக் கேளுங்கோ அப்பக்கோப்பை எண்டா என்னெண்டு. தெரியாட்டி இது சம்பந்தமா நானெழுதின பதிவப் பாக்கச்சொல்லுங்கோ.
எனக்குப் பக்கத்தில வந்தஉடன உங்களுக்கும் அந்த வியாதி தொத்தீட்டுது கண்டியளோ?
நான் ஊருக்குப் போனதாச் சொன்ன அந்த மாதன முத்தாவப் பாக்க வேணுமே?

அதுசரி நாளைக்கு வலைப்பதிவு தொடங்கப்போறன் எண்டு போடேலயே.
நீங்கள் என்ர பதிவப் படிக்கிறதவிட உருப்படியா வேற எதாவது செய்யலாமே

 

post a comment