டி.சே. கடவுளானால்?
டி.சே மான்மியம் -2. கடவுளுக்கு அலுப்பு வந்தது. ஒருவனைப்பிடிச்சு கொஞ்ச நேரம் உலகத்தைக் கவனிக்கச் சொல்லிவிட்டு ஓய்வெடுக்கலாமென்று நினைத்தார். கடவுளிடம் மாட்டுப்பட்டவர் எங்கட சக வலைப்பதிவாளர் டி.சே.தமிழன். "இந்தா. என்ர வல்லமை முழுக்க உனக்குத்தாறன். கொஞ்ச நேரம் இதிலயிருந்து உலகத்தைப் பாத்துக்கொள். நான் உதிலயொருக்காப் போட்டு வாறன்" எண்டு டி.சேக்குச் சொல்லி, என்னென்ன செய்யவேணுமெண்டும் சுருக்கமாச் சொல்லிக்குடுத்திட்டுப்போயிட்டார். டி.சே கடவுளாக இருந்தது வெறும் 5 நிமிசம்தான். அந்த 5 நிமிசத்தில டி.சே செய்த காரியத்தைக் கீழுள்ள இணைப்பிற் சென்று பாருங்கள். DJ is a god. God is a DJ. டி.சேயின்ர அடாவடி நடந்த சந்தி எதுவெண்டு ஆருக்காவது தெரியுமோ? (DJ எண்டு பேர் வச்சிருக்கும் வரைக்கும் தப்பமுடியாதே?? எனக்கே அலுப்பு வந்து உம்மை விட்டால்தான்.) அதுவரை, மான்மியம் தொடரும்... படம் இங்கேயே இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பதிவுகள் |
Comments on "டி.சே. கடவுளானால்?"
உங்கள் இரண்டு பேருக்கும் அப்பிடி என்ன பிரச்சனை??? ஏன் இப்படி இரண்டு பேரும் பிடுங்குப்பட்டுக்கொண்டு இருக்கிறியல்!!!
உதில கெட்டவார்த்தைகளும் சொல்லுப்பபடுது.. அதுயார்..டிசேயோ?
வாங்கோ ஒளியினிலே,
உங்களுக்கெல்லாம் நாயகன் பதில்தான்.
"அவனை நிப்பாட்டச் சொல்லு. நான் நிப்பாட்டுறன்."
ஆகா.. தொடங்கிற்றாங்கய்யா.. தொடங்கிற்றாங்க...
அது சரி... யார் டி.சே.???
கொழுவி,
நானும் நீரும் ஒண்டு எண்டு கதை அடிபடேக்குள்ள இப்பிடி வந்து பின்னூட்டம் போடலாமோ?
உங்கள் இரண்டு பேருக்கும் அப்பிடி என்ன பிரச்சனை?
Test
நல்ல ஐடியா. வசந்தன் உமக்கு டி.சே என்ற பெயரில கோபமா? அல்லது அந்த மனுசனில கோபமா?ஒன்டு விளங்குது. நீரும் லேசுப்பட்ட ஆளில்ல..
டி சே கடவுளானால்.. அழகான தேவதைகள் இயற்கை உடையுடன் சூழ நிற்க சில வேளை கவி பாடுவார்
அதுக்கு உங்களுக்கு என்னங்க வந்தது...
எனக்காக குரல் கொடுத்த மலைநாடன், சின்னக்குட்டிக்கு நன்றி.
/டி சே கடவுளானால்.. அழகான தேவதைகள் இயற்கை உடையுடன் சூழ நிற்க சில வேளை கவி பாடுவார்/
ஆகா, இந்த நினைப்பே எவ்வளவு இதமாயிருக்கிறது :)
/அதுக்கு உங்களுக்கு என்னங்க வந்தது... /
நல்ல கேள்வி.
எழுதிக்கொள்வது: ஷ்ரேயா
இதெல்லாம் டிசேக்குக் கிடைத்திருக்கிற புத்தகங்கள் தனக்கில்லையே என்டுற வயித்தெரிச்சலா இருக்கக்கூடும்!!
22.27 26.5.2006
இதெல்லாம் டிசேக்குக் கிடைத்திருக்கிற புத்தகங்கள் தனக்கில்லையே என்டுற வயித்தெரிச்சலா இருக்கக்கூடும்!! ;O)
கடசியா வந்த ஷ்ரேயாவுக்கு மட்டும் இப்ப பதில். மற்றாக்களுக்குப் பிறகு வாறன்.
அம்மா, ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வலைப்பக்கம் வந்தா உப்பிடித்தான்.
நான் உந்தப்பதிவு போட்டு முழுமையா மூண்டு மாசம் முடிஞ்சுது.
இப்ப வந்து நிண்டுகொண்டு அவரின் புத்தகப் பதிவைப் பற்றிக் கதைக்கிறியள்?
மலை நாட்டார் இண்டைக்குத் தோண்டியெடுத்துப் பின்னூட்டமிட்டாப்போல அது முன்னுக்கு நிக்குது.
அம்மா என்டுறதை வன்மையாக் கண்டிக்கிறன்.
மற்றும்படி ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வாறதும், பின்னூட்டுறதும் பற்றி ஒன்டும் சொல்லுறதுக்கில்ல! :OP
வருகைக்கு நன்றி மலைநாடான்.
நான் லேசுப்பட்ட ஆளில்லையெண்டது இப்பதான் உங்களுக்குத் தெரியுமோ?
ஆனா அது தெரிய வேண்டிய ஆக்களுக்குத் தெரியேல. சுமமா கொழுவிக்கொண்டு இருக்கிறாங்கள்.
சின்னக்குட்டியரே,
அவர் தேவதைகள் புடைசூழ 'இயற்கை'யாய் நிண்டு கவிபாடினா எனக்கென்ன வந்தது? ஏன் மனுசரைப் போட்டுப் படுத்துவான் எண்டதுதான் என்ர கேள்வி.
டி.சே,
உமக்காகப் பதிவு போட்டிருக்கிறன். 3 மாசத்துக்குப்பிறகுதான் உமக்குத் தெரிஞ்சதோ?
சரிசரி. ஏற்கனவே இதுக்கு முதற்பதிவுக்குப் பதிலடி தாறன் எண்டு சொல்லி இன்னும் தரேல.
ஷ்ரேயா,
அம்மா எண்டதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளிறன்.