வன்னி-கிளிநொச்சியில் ஒரு வாழைமரம் மூன்று வாழைக்குலைகளை ஈன்றுள்ளது. சாந்தபுரம் கணபதி சத்தியசீலனின் வாழத்தோட்டத்திலேயே இவ்வதிசயம் நிகழ்ந்துள்ளது. படங்களைப் பாருங்கள்.
(உவங்களோட பெரிய அரியண்டம். எல்லாப்படத்திலயும் தங்கட பேரைப்போட்டு வச்சிருக்கிறாங்கள்.)
நன்றி: சங்கதி. |
Comments on "மூன்றுகுலை ஈன்ற வாழை."
ஒரே தண்டில் மூன்று பொத்திகள் !
//உவங்களோட பெரிய அரியண்டம். எல்லாப்படத்திலயும் தங்கட பேரைப்போட்டு வச்சிருக்கிறாங்கள்//
இல்லாட்டி அதையும் நீங்கள் எடுத்தேண்டு எல்லோ சொல்லிப்போடுவீங்கள்:)
ஆம். சிறிரங்கன்,
அது ஒரே தண்டில் 3 பொத்திகள் தான்.
தவறுக்குப் பொறுத்தருள்க.
அதுவும் ஒரு சீப்புத்தள்ளிய பின்தான் 3 பொத்திகளும் பிரிந்துள்ளன.
எங்கள் ஊரில் பக்கத்து வீட்டுக்காரரின் ஒரு வாழை இரு குலைகள் தள்ளியது. இரண்டும் எதிரெதிர்த்திசையில். இவ்வளவுக்கும் எங்கட குறிச்சியில வாழைமரம் சரியா வராது.
வசந்தன் 1973ம் வருடம் நான் எங்கள் வாழை மரத்தின் நடுப்பகுதியில் கத்தியால் கிழித்திருந்தேன்.அம்மாவோடு சண்டைபோட்டு!அந்த வாழை தண்டுக்குள்ளால் குலை தள்ளிப் பட்டுப்போனது.அதை மனதில் வைத்துப் பார்த்தபோது,எத்தனை குலைகள் ஈன்றாலும் தண்டு ஒன்றே என்று கூற வந்தேன்.
//இல்லாட்டி அதையும் நீங்கள் எடுத்தேண்டு எல்லோ சொல்லிப்போடுவீங்கள்:)
//
உந்த "உம்"மைத் தொகை எதுக்கு வருது எண்டு விளங்கேல.
சிறிரங்கன்,
பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்திருக்கிறியள் போல.
அட, ஆச்சரியமா இருக்கே!!
//அட, ஆச்சரியமா இருக்கே!!
//
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தது கூடத்தான்.