பத்தாயிரம் பேரின் ஆயுதப்பயிற்சி
வன்னியில் மக்களின் ஆயுதப்பயிற்சி நிறைவு நிகழ்வு நடைபெற்றது. ஆயுதப்பயிற்சி பெற்ற பத்தாயிரம் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மக்களுக்கான ஆயுதப்பயிற்சி 1999 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. பின் வன்னியின் எல்லையைக் காப்பதற்கு சுழற்சி முறையில் மக்கள் களப்பங்காற்றினர். இதைவிட மக்கள் நேரடியாக சண்டைக்களங்களிற் பங்காற்றினர். ஓயாத அலைகள் -3 தொடங்கியபின் எல்லா சமர்முனையிலும் மக்களின் நேரடிப்பங்களிப்பு இருந்தது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் வரும்வரை ஒன்றரை வருட போரில் 300 பேர்வரையான பொதுமக்கள் போர்க்களத்தில் வீரச்சாவடைந்திருந்தனர். இம்மகள் படை 'எல்லைப்படை' என்ற பேரால் அழைக்கப்பட்டது. இப்போது பெருமெடுப்பில் மக்களுக்கான ஆயுதப்பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி நிறைவுசெய்தவர்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஒன்றுதிரட்டி பயிற்சி நிறைவு நிகழ்வு முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு பற்றிய படங்கள் கீழே. படைப்பலம்தான் எமது உரிமைகளைத் தீர்மானிக்கும். எதிரி மனக்கனம் கொள்ளாதபடி எமது பலம் அடிக்கடி காட்டப்பட வேண்டும். பெருக்கப்பட வேண்டும். மக்கள் பயிற்சி பற்றி வன்னியன் எழுதிய பதிவொன்று. படங்கள்: சங்கதி. |
Comments on "பத்தாயிரம் பேரின் ஆயுதப்பயிற்சி"
எழுதிக்கொள்வது: சிவா.
தகவலையும் படங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
22.11 6.6.2006
தூரம் அதிகம் இல்லை!!
கண் சிவந்தால்...
சிவா, விண்ணாணம், மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.