திருமண வாழ்த்து
பெரும் எதிர்பார்ப்புக்கும் ஆர்ப்பாட்டங்களுக்குமிடையில் ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்துவிட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.06.2006) சிட்னியில் கோலாகலமாக அத்திருமணம் நடந்தது. அண்மைக் காலமாக பரபரப்பாகப் பேசப்பட்ட திருமணம் அது. புகழ்பெற்ற திரைப்பட நடிகை Nicole Kidman க்கும் Keith Urban க்கும் நடைபெற்ற திருமணத்தைப்பற்றியே இங்கு எழுதுகிறேன். ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் தனது 39 ஆவது வயதைப் பூர்த்திசெய்தவர் கிட்மன். இத்தம்பதியர் நீடூழி வாழ எனது வாழ்த்து. ****************************** இத்திருமணத்தில் எனக்கு தனிப்பட்டதொரு மகிழ்ச்சியுண்டு. என்னையும் Nicole Kidman ஐயும் இணைத்துக் கிசுகிசு எழுதியவர்களின் வாய் இதன்மூலம் அடைக்கப்பட்டுள்ளது. விரைவில் இன்னொரு திருமணத் தகவலோடும் வாழ்த்தோடும் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம்கூறி விடைபெறுகிறேன். |
Comments on "திருமண வாழ்த்து"
எழுதிக்கொள்வது: துளசி கோபால்
//Nicole Kidman ஐயும் இணைத்துக் கிசுகிசு எழுதியவர்களின் வாய் இதன்மூலம் அடைக்கப்பட்டுள்ளது.//
ச்சும்மாச் சொல்லக்கூடாது. லொள்ளு கூடித்தான் இருக்கு:-)))))
21.53 26.6.2006
வாராய் என் தோழி வாராயோ (மீண்டும்) மணப்பந்தல் காண வாராயோ..
/என்னையும் Nicole Kidman ஐயும் இணைத்துக் கிசுகிசு எழுதியவர்களின் வாய் இதன்மூலம் அடைக்கப்பட்டுள்ளது./
/ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் தனது 39 ஆவது வயதைப் பூர்த்திசெய்தவர் கிட்மன்./
இப்பவாவது உண்மையை ஒப்புக்கொண்டீரே, உமக்கு 40 வயசு என்டதை.
....
சரி என்ன செய்ய? சோகந்தான்...இந்தாரும் நான் கேட்டுக்கொண்டிருக்கின்ற பாடலை நீரும் கேட்டு சோகத்தை ஆற்றிக்கொள்ளும் தேநீரைப்போல.
எழுதிக்கொள்வது: இளவஞ்சி
// என்னையும் Nicole Kidman ஐயும் இணைத்துக் கிசுகிசு எழுதியவர்களின் வாய் இதன்மூலம் அடைக்கப்பட்டுள்ளது. //
ம்ம்ம்.. என்னத்த சொல்ல... 39 வயதுக்காரியுடன் உம்மை இணைத்து கிசுகிசுவா? பால் வடியும் முகம் கொண்ட உமக்கு நேர்ந்திட்ட சதி இது! :)))
சரிசரி.. விடும்! எலிசபத்து டைலரு 9வதா ஆள் தேடறதா ஒரு வதந்தி இருக்கு! சரிப்பட்டா பார்க்கலாம்!!!
18.47 26.6.2006
எழுதிக்கொள்வது: johan-paris
என்ன? வசந்தன் ஏமாத்திப் போட்டா போல!அதுகிடக்க ;இவ போன கலியாணம் "டிவோஸ் கிடைச்சதும் குதிச்சகுதி ,நினைவுக்கு வந்து தொலையுது.மண் ++++;மனிசன் ++++++.
யோகன் பாரிஸ்
16.13 26.6.2006
//ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் தனது 39 ஆவது வயதைப் பூர்த்திசெய்தவர் கிட்மன்./
இப்பவாவது உண்மையை ஒப்புக்கொண்டீரே, உமக்கு 40 வயசு என்டதை//
.
வசந்தனுக்கு இப்படியும் இருந்திருக்கலாம் தானே........ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி...மறுபுறம் பார்த்தால் காவேரி மாதவி..............
எழுதிக்கொள்வது: mayooresan blogmayu.blogspot.com mayu3g@gmail.com
அன்புள்ள வசந்தன். இது என்னுடைய பின்னூட்டல் பற்றியது அல்ல. எனக்கு சிறு உதவி தேவைப்படுகின்றது. எனது வலைப்பதிவின் டெம்பிளேட்டில் சிறு மாற்றங்கள் செய்தேன் ஆனால் இப்போது எனது விரங்களைக்காட்டும் மற்றும் லிங்ஸ் காட்டும் பகுதி கீழே இறங்கிவிட்டது தயவு செய்து எப்படீ மேலே பழைய இடத்திற்கு கொண்டுவருவது
17.52 1.7.2006
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
ஆனால் எல்லோரும் என்னை நக்கலடிப்பதாகவே இருக்கிறீர்கள். ஒருவருக்குக்கூட அவர்களை வாழ்த்தத் தோன்றவில்லை.
சீச்சீ... என்ன மனுசங்களப்பா...
வசந்தன்,
Nicole Kidman உடைய திருமணத்திற்கு நீங்கள் வாழ்த்து கூறுகிறீர்களா இல்லை, ஏமாத்தி விட்டாளே என்பதால் "எங்கிருந்தாலும் வாழ்க என்கின்றீர்களா"?
சரி சரி.... யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் சந்தோசமாக இருந்தால் சரி. :)
வசந்தன்,
Nicole Kidman உடைய திருமணத்திற்கு நீங்கள் வாழ்த்து கூறுகிறீர்களா இல்லை, ஏமாத்தி விட்டாளே என்பதால் "எங்கிருந்தாலும் வாழ்க என்கின்றீர்களா"?
சரி சரி.... யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் சந்தோசமாக இருந்தால் சரி. :)
கரன்,
வருகைக்கும் வயித்தெரிச்சலுக்கும் நன்றி.
(நீர் கெளரிகரன் தானே?)