Sunday, March 25, 2007

"சிஞ்சா மனுசி" ஒலிப்பதிவுக் கலையகம் அறிமுகம் - ஒலிப்பதிவு

யாருக்கும் தெரியாமல் புதிய ஒலிப்பதிவுக் கலையகமொன்றை ஒருவர் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் 'சிஞ்சா மனுசி' யாம்.
அதன் பரீட்சார்த்த ஒலிப்பதிவுகளையும் செய்துகொண்டிருக்கிறார். விரைவில் பெருமெடுப்பில் இசையமைப்பு, பாடல் ஒலிப்பதிவு என்பவற்றைச் செய்ய இருக்கிறார்.

வெளிவரவிருக்கும் அவரது பாட்டுத்திரட்டொன்றில் இடம்பெறும் சிறு ஒலித்துண்டொன்று தற்செயலாக எனக்குக் கிடைத்தது. அதிகாரபூர்வமற்ற முறையில் அக்கலையகத்தையும் அச்சிறு ஒலித்துண்டையும் இங்கே அறிமுகம் செய்கின்றேன்.

பாடலைப் பாடுவது யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா?





சற்றுமுன் கிடைத்த தகவற்படி அந்நபர் பாடல்வரிகளுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. சரியான முறையில் பாடல்வரிகள் அமையாத அதிருப்தியில் அவர் இருக்கிறார்.
யாராவது பாடல் எழுதித்தந்தால் இசையமைத்துப் பாடலாக்கலாம் என்று விரும்புகிறார்.

எனவே எழுதத் தெரிந்த யாராவது அவருக்குப் பாடலெழுதிக் கொடுத்தால் நன்று.

ஒலிப்பேழை தொழிற்படாவிட்டால் இங்கே அழுத்துங்கள். தானாகத் தொழிற்படும்.

Labels: ,

Comments on ""சிஞ்சா மனுசி" ஒலிப்பதிவுக் கலையகம் அறிமுகம் - ஒலிப்பதிவு"

 

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said ... (March 25, 2007 11:34 AM) : 

வேற கருப்பொருள்ல பாடியிருந்தாத்தான் அவருக்குப் பாடல்வரிகளுக்குத் தட்டுப்பாடு வந்திருக்கும்.. :O))

 

Blogger வெற்றி said ... (March 25, 2007 11:47 AM) : 

வசந்தன்,
சிஞ்சா என்றால் என்னவென்று தயவு செய்து சொல்ல முடியுமா? இது தமிழ்ச் சொல்லா? இதுவரை நான் இச் சொல்லைக் கேள்விப்படவில்லையே!
நன்றி.

 

Blogger கானா பிரபா said ... (March 25, 2007 12:10 PM) : 

பாட்டே கேட்கேல்லாமக் கிடக்கு, என்னெண்டு பாரும்

 

Blogger வி. ஜெ. சந்திரன் said ... (March 25, 2007 12:30 PM) : 

வசந்தன் நல்ல துல்லியமான ஒலிபதிவு. :)



//சிஞ்சா என்றால் என்னவென்று தயவு செய்து சொல்ல முடியுமா? இது தமிழ்ச் சொல்லா? //

சிஞ்சா எண்டால்? எனக்கு தெரிஞ்சு, ஆருக்கும் ஆமா போட்டு கொண்டு திரியிறதை சிஞ்சா பொடுறதெண்டு நக்கலா சொல்லுறது.
அடுத்ட்து சின்னனிலை மேள சமாவுக்கு தாளம் போடுற அந்த தாளத்தையும் சொல்லுறனாங்கள்

வசந்தன் என்ன கருத்திலை சொன்னவர்??


//பாட்டே கேட்கேல்லாமக் கிடக்கு, என்னெண்டு பாரும் //

ஏன் உங்களுக்கு கேக்கேல்லையோ


:))

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (March 25, 2007 2:28 PM) : 

ஷ்ரேயா,
வருகைக்கு நன்றி.
கொஞ்சக் காலத்துக்கு முதல் எண்டா அவருக்கு உப்பிடியான விசயங்கள் அருவியாக் கொட்டியிருக்கும். இப்ப திகட்டிப் போட்டுது போல கிடக்கு. கற்பனையும் வறண்டு போச்சுப்போல. இதுக்கே கற்பனை வளமும் சொல்வளமும் முடிஞ்சுபோச்சு எண்டா என்ன கருத்து?

என்னை மாதிரியோ டி.சேயை மாதிரியோ ஆராவதுதான் கற்பனை பண்ண முடியுமெண்டபடியா நாங்கள் ஆராவது எழுதினால்தான் உண்டு.

ஆனா வாலி, வைரமுத்து எல்லாம் என்னண்டு இவ்வளவு காலமும் ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் எழுதிச்சினம் எண்டது தான் விளங்கேல.
_________________________

வெற்றி,

சிஞ்சா எண்டு நாங்கள் சொல்லிறது ஒரு இசைக்கருவியை.
இந்தப் பாட்டிலகூட பின்னால ஒரு சத்தம் கேட்குது பாருங்கோ, அதுதான் சிஞ்சா.
(தமிழ்நாட்டில இதையே ஜால்ரா எண்டு சொல்லுவினமோ?)
ஒருவர் சொல்லிற எல்லாத்துக்கும் ஆமா போட்டுக்கொண்டிருக்கிறதையும் 'சிஞ்சா' எண்டு சொல்லிறது. (தமிழகத்தில ஜால்ரா தட்டுறதெண்டுறது)
கலையகத்துப் பேரில இருக்கிற 'சிஞ்சா' எந்தக் கருத்தில வருதெண்டு கேட்கக்கூடாது.
;-)

 

Blogger சினேகிதி said ... (March 25, 2007 4:36 PM) : 

ஓ ...சயந்தன் அண்ணா இது வேறயா?? சஜி என்றிருக்கிறதால நீங்கள்தான் என நினைக்கிறேன் இன்னும் ஒலிப்பதிவில என்ன இருக்கென்று கேக்கேல்ல...பட் பாட்டென்றால் சொறி அதுக்கும் போட்டியிருக்கு :-)))

 

Anonymous Anonymous said ... (March 25, 2007 5:40 PM) : 

ஓ.. இணையத்தில லீக் ஆன சிவாஜி பட பாடல்களில இதுவும் ஒன்றா..? :))

 

Blogger மலைநாடான் said ... (March 25, 2007 5:51 PM) : 

வசந்தன்!

இது பிழையான விசயம். ஒலிப்பதிவு கூடத்தில அவர் முயற்சிக்கும்போது, வரிவரியாகக் கேட்டு ரசித்து, ஒலிபரப்பு உரிமையை நான் வாங்கி வைத்திருக்கேக் நீங்கள் இப்பிடி வெளியிட்டுப்போட்டியளே. ஆனால் கெதியாச் செய்து தராமல் அவர் காலம் கடத்தினத்துக் காரணம் இப்பதான் விளங்கிச்சு:)) சரி..சரி நீங்களோ அல்லது டிசே, அல்லது வி.ஜெ. சந்திரன், அல்லது ரவிசங்கர், என ஆராவது உதவலாம் தானே.?

சிநேகிதி!
கவனம். ஏற்கனவே உங்களில ஒரு கறள் இருக்கு.. பாத்து:)

 

Anonymous Anonymous said ... (March 25, 2007 5:57 PM) : 

//வரிவரியாகக் கேட்டு ரசித்து,//

உங்களுக்கே ஓவராகத் தெரியல்லையா.. மலைநாடான்.. :)

 

Blogger செல்லி said ... (March 25, 2007 8:19 PM) : 

வசந்தன்
//கண்ணுக்குள்ள களந்திடிச்சு உந்தன் வனப்பு//
இதில கலந்திடிச்சு என்பதை களந்திடிச்சு என்று பாடுறார் கேட்டீங்களா?
மற்றது பின்னணி இசையில"பொய்ங்" என்று வேற இசையும் கலக்கிறதை தவிர்த்திருக்கலாம்.
மற்றப்படி,o.k.

 

Anonymous Anonymous said ... (March 26, 2007 4:10 AM) : 

இதில கலந்திடிச்சு என்பதை களந்திடிச்சு என்று பாடுறார் கேட்டீங்களா?

because its tamil song.. so he must sing like that...

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (March 26, 2007 8:13 AM) : 

சந்திரன்,
நான் எந்தக்கருத்திலயும் 'சிஞ்சா'வைச் சொல்லேல. அவர்தான் தன்ர கலையகத்துக்கு இந்தப்பேரை வைச்சிருக்கிறார்.

உங்கட சிஞ்சா விளக்கத்துக்கு நன்றி.

_________________________
சினேகிதி,

பாட்டும் பாடப்போறியளா?
சின்னக்குட்டியர் சொன்னமாதிரி ஏற்கனவே ஒருகடுப்பில இருக்கேக்க குரற்பதிவு எண்டு வந்தியள். சரியெண்டு அதைவிட்டிட்டு அடுத்த தளத்துக்குத் தாவினா இப்ப இது வேறயா?
அவர் இனி எங்கதான் போவார்?

சரிசரி, நீர் பாடும். நாங்கள் கேக்கிறம்.
ஒரு பெண்குரலெண்டாலும் ஒலிக்குதே!

அதுசரி, நீங்கள் ஏன் பாட்டு எழுதக்கூடாது. கண்ணே, மணியே, மானே, தேனே எண்டு நாங்கள் சொல்லிறமாதிரி நீங்கள் ஆண்களை விளிச்சு எழுதினா வித்தியாசமா இருக்குமெல்லோ?
உங்கள் உள்ளங்கவர்ந்த கள்வனை வைச்சு ஒரு பாட்டெழுதி அதை உங்கட குரலிலயே பாடியும் தந்தா அந்தமாதிரியிருக்கும்.

 

Anonymous Anonymous said ... (March 26, 2007 9:40 AM) : 

//உங்கள் உள்ளங்கவர்ந்த கள்வனை வைச்சு ஒரு பாட்டெழுதி அதை உங்கட குரலிலயே பாடியும் தந்தா அந்தமாதிரியிருக்கும்.//

கள்ளனை பொலிசிட்ட பிடிச்சு குடுக்காமல்.. பாட்டெழுதி தர சொல்லி கேட்டு. காலம் கலி காலமப்பா

 

Blogger தமிழ்பித்தன் said ... (March 26, 2007 12:52 PM) : 

எனக்கு தெரியும் வசந்தன் யாரேன்று நான் ஒருவாரத்துக்க முதலே கேட்டுவிட்டேன் ஆனாலும் அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை ஆனாலும் சிறு உதவி கொடுக்கிறென் இதமான காற்றுக்கு இதை அடைமொழியாக பாவிப்பார்கள்
((பாவம் அந்தால் நல்லா பாதிக்கப் பட்டுத்தான் இருக்கிறார் பொல கிடக்கு))

 

Blogger தமிழ்பித்தன் said ... (March 26, 2007 12:53 PM) : 

எனக்கு தெரியும் வசந்தன் யாரேன்று நான் ஒருவாரத்துக்க முதலே கேட்டுவிட்டேன் ஆனாலும் அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை ஆனாலும் சிறு உதவி கொடுக்கிறென் இதமான காற்றுக்கு இதை அடைமொழியாக பாவிப்பார்கள்
((பாவம் அந்தால் நல்லா பாதிக்கப் பட்டுத்தான் இருக்கிறார் பொல கிடக்கு)

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (April 07, 2007 9:48 PM) : 

//தமிழ்பித்தன் said
எனக்கு தெரியும் வசந்தன் யாரேன்று//


ஐசே,
உமக்கு இப்பதான் தெரியுமோ நான் ஆரெண்டு?
சரி, அதைவிடும்.
நான் கேட்டது இந்த இடுகையில இருக்கிற பாட்டைப் பாடினது ஆரெண்டுதான்.
;-)
;-)

 

Anonymous Anonymous said ... (July 26, 2007 4:31 AM) : 

This comment has been removed by a blog administrator.

 

post a comment