Monday, February 19, 2007

ஈழத்தவரின் Rap பாடல் ஒளிப்பதிவு

ஈழத்து இளைஞர்களின் படைப்புக்களில் இதுவுமொன்று.
என்னை எவ்விதத்திலும் கவரவில்லையென்றாலும் நிறைய இரசிகர்கள் இருப்பார்களென்பதால் இதை இங்குப் பதிவாக்குகிறேன்.

இந்த rap ஐ என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
வன்னியில் இசைப்பிரியனின் இசையில் இப்படியொரு பாடல் வந்தபோது மூக்கின்மேல் கோபம் வந்தது. ஏனென்று தெரியவில்லை. (டி.சே கொடுக்குக் கட்டுறது தெரியுது. பொறும் ஐசே. உண்மையத்தான் சொல்லிறன்.) சிலவேளை என்போன்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்துகொண்டு, அதற்குமேல் இந்த முயற்சிகளில் இறங்கினால் கோபம் வராதோ என்னவோ?



இவரின் இன்னொரு பாடல் ஞாபகம்

Labels: , ,

Comments on "ஈழத்தவரின் Rap பாடல் ஒளிப்பதிவு"

 

said ... (February 19, 2007 3:49 PM) : 

டி.சே கொடுக்குக் கட்டுறது தெரியுது. பொறும் ஐசே. உண்மையத்தான் சொல்லிறன் :-) :-)

 

said ... (February 19, 2007 3:51 PM) : 

வசந்தன் நீர் இணைச்சிருக்கிற பாடல், ரிரிஎன் இலை நேயர் விருப்பு வாக்குகள் அடிப்படையிலை கன காலமா முதலாவதா இருந்த பாடல்.

ஞாபகம் எனும் பாடலை இண்டைக்கு தான் கேட்டன்/ பாத்தன்.

அவர்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் முதலில்.


உம்மடை புளொக்கிலை இன்னும் பிரச்சனை தீரேல்லை போல.

 

said ... (February 21, 2007 11:05 AM) : 

சினேகிதி, ஜெயச்சந்திரன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//உம்மடை புளொக்கிலை இன்னும் பிரச்சனை தீரேல்லை போல.//

உந்த பின்னூட்டங்கள் திரட்டிற பெட்டி போட்டுப் பாத்தன். அதுதான் பிசகு குடுக்குது.
பதிவுபோடுறதே ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா. இதுக்குள்ள பின்னூட்டங்கள் வேற திரட்ட வெளிக்கிடுறது பேராசைதானே?

 

said ... (February 23, 2007 11:48 PM) : 

றப் எண்டு சொல்லுன்னால், பேச்சு வளக்கில் இருப்பதனை ஒரு கருத்தாக சொல்லுவதே ஆகும், அதைனையே பிற் காலத்தில் எதுகை மோனையுடன் சேர்த்துப் பேசத்தொடங்கியதன் பின் அதற்கு பின் இசையும் இணைத்து வழங்கிய போது ஒரு வித்தியாசமான வடிவில் அமைந்தது அதனையே ஒரு இசை வடிவமாக வழங்கத் தொடங்கி விட்டார்கள்.... ஏன் நமது கிராமியப் பாடல்களையே எடுத்துப் பாருங்கள்... அதுவும் ஒருவகை றப் மாதிரி இருப்பது தெரிய வரும். உதாரணம்: ஏன்டி குட்டி என்னடி குட்டி குட்டி என்னடி செய்கிறாய்.... அம்மியடியில கும்மி அடித்தேன் சும்மாவா இருந்தேன்... ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்கிராய்... ஆட்டுக் குட்டிக்கு பல் துலக்கினேன் சும்மாவா இருந்தேன்... அப்படியே பாட்டு செல்கிறது... இதற்கு... கற்பனையில் ஒரு பின் இசையப் போட்டு... அப்படியே ஒரு பாடினால்... ஒரு றப் தானே அது :)

 

said ... (March 07, 2007 6:46 AM) : 

வசந்தன், என்னையேன் திட்டுகிறீர்? உமக்கு மட்டுமில்லை எனது பல நண்பர்களுக்கும் ராப் பாடல்கள் பிடிப்பதில்லை.

 

post a comment