Tuesday, October 10, 2006

தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள் - தொகுப்பு 1

இன்று 'தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்'.
விடுதலைப்புலிகள் அமைப்பில் முதன்முதல் களப்பலியான பெண்போராளி 2ஆம் லெப். மாலதி அவர்கள் நினைவுநாளே 'தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக'அனுட்டிக்கப்படுகிறது.

10.10.1987 அன்றுதான் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்குமிடையில் போர் மூண்டநாள். யாழ்ப்பாணத்தில் தமது முகாமிலிருந்து முன்னேறிய படையினருடன் புலிகள் போரிட்டனர். அப்போது கோப்பாய்ப்பகுதியில் நடைபெற்ற மோதலில் 2ஆம் லெப். மாலதி வீரச்சாவடைந்தார். புலிகளின் மகளிர் படையணியின் முதல் வீரச்சாவு அது.
அதன்பின் இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண்போராளிகள் தாயக விடுதலைக்காகத் தமதுயிரை அர்ப்பணித்துள்ளனர்.
இன்று கனரக ஆயுதங்கள் கையாள்வது தொடக்கம் சகல துறைகளிலும் பெண்புலிகள் பங்காற்றுகின்றனர்.
நேரடியான சண்டையணிகளாக
மாலதி படையணி
சோதியா படையணி
அன்பரசி படையணி உட்பட படைப்பிரிவுகளையும் கடற்புலிகளுட்பட சகல படைத்துறைப் பிரிவுகளிலும் பெண்கள் பங்கு வகிக்கின்றனர்.

ஓயாத அலைகள் சமரில் கொட்டும் மழைக்குள் கனரக ஆயுதத்தை இயக்கும் பெண்புலியணி.


களத்தில் மருத்துவப் போராளிகளாக


களத்தில் உற்ற தோழியாக


120mm மோட்டார் எறிகணையுடன் குட்டிசிறிப் பீரங்கிப் படையணிப் போராளி


120mm கனரகப் பீரங்கியுடன் பெண்புலிகள்


எதிரியிடம் கைப்பற்றிய கவச வாகனத்துடன் பெண்புலிகள்

விழுப்புண்ணேற்ற தோழியைக் காவிவரும் போராளி


_________________________________________
சில படங்கள்: அருச்சுனா

_________________________________________

Comments on "தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள் - தொகுப்பு 1"

 

post a comment