Saturday, September 02, 2006

அம்பலம் -1

வன்னியில் தயாராகும் 'அம்பலம்' என்ற ஒளித்தொகுப்பு கிழமைதோறும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
சமகால அரசியலைப் பற்றிக் கதைப்பதாக இக்கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
அவற்றின் அரசியற்கருத்துக்களுக்காக மட்டும் என்றில்லாமல் பேச்சுத் தமிழுக்காகவும் பார்க்கலாம்.
அடிக்கடி பழமொழிகள் சொல்லிக் கதைக்கும (நேரிற் கதைத்தாலும் அப்படித்தான்) தமிழ்க்கவி அம்மாவின் தயாரிப்பில் இடம்பெறுகிறது இந்த 'அம்பலம்' நிகழ்ச்சி.

பதிவு வலைத்தளத்தில் கிழமைதோறும் இவ்விணைப்புப் புதுப்பிக்கப்படுகிறது.
அதிலேயே தரவிறக்க வசதி செய்து தந்தாலும் இணைப்பு செயற்படவில்லை.
எனவே அப்பக்கத்துக்கான இணைப்பை மாத்திரம் இங்குத் தருகிறேன்.
ஒவ்வொரு கிழமையும் புதிய அம்பலம் வந்தவுடன் அதன் இணைப்பை இங்கு வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

இவ்வார அம்பலம்: 01.09.2006


நன்றி: பதிவு

Comments on "அம்பலம் -1"

 

post a comment