Tuesday, September 25, 2007

Escalator பழுதடைந்தால் என்ன செய்வது?


Broken Escalator - Watch more funny videos here

Labels:

Monday, May 14, 2007

கலப்பு நடனம் -1

சிறுமியொருத்தி சில நடன வகைகளைக் கலந்து ஆடுகிறாள்.
சரி, தவறு என்பவற்றுக்கப்பால் பார்க்க இரசிக்கும்படியாக இருக்கிறது.

அச்சிறுமிக்கு ஏற்படக்கூடிய களைப்பையும், அது எதுவுமே வெளித்தெரியாமல் அவள் ஆடுவதையும் நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. சிறந்த மூச்சுக்கட்டுப்பாடம் பயிற்சியுமின்றி இது சாத்தியமில்லை.

தமிழ்ப்பாட்டுக்கு ஆடுகிறார்கள். ஆனால் எல்லாமே இந்தி வாலாக்களாகத் தெரிகிறது.
பாடல்வரிகள் புரிந்துதான் ஆடுகிறார்களா?

Labels: ,

Saturday, April 21, 2007

சயந்தன் வீட்டுப்பூனைக்கு நடந்தது என்ன?

சயந்தனின் கொடுமை தாங்காமல் அவரின் வீட்டிலிருந்து பூனையொன்று தப்பிச்சென்றது வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 'பூனையின் வாக்குமூலம்' என்ற இடுகையில் பாதிக்கப்பட்ட பூனை தன் வாக்குமூலத்தைப் பதிந்திருந்தது.
அங்கிருந்து தப்பிய பூனைக்கு என்ன நடந்தது? அது என்ன செய்கிறது என்று அறிய பலர் ஆவலாயிருப்பீர்கள்.

எமது துப்பறியும் பிரிவு அப்பூனையைக் கண்டுபிடித்துவிட்டது.
அது இப்போது மிகமிக மகிழ்ச்சியாக ஆடிப்பாடி கொண்டாட்டமாக இருக்கிறது.
ஒரு கொடுமையாளனிடமிருந்து தப்பித்த மகிழ்ச்சியில் கொண்டாட்டமாக ஆடிப்பாடும் பூனையை மறைந்திருந்து படம்பிடித்தது எமது துப்பறியும்குழு.
அந்த காணொளிக் காட்சியை நீங்களும் கண்டுகளியுங்கள்.




அப்பூனையின் பாதுகாப்புக் காரணங்களுக்காக (வேறென்ன? தெரிந்தால் மீண்டும் அப்பூனை பழைய கொடுமைகளை அனுபவிக்க வேண்டிவருமென்பதுதான்) தற்போது அப்பூனை இருக்குமிடத்தைச் சொல்ல முடியாது.

Labels:

Monday, February 19, 2007

ஈழத்தவரின் Rap பாடல் ஒளிப்பதிவு

ஈழத்து இளைஞர்களின் படைப்புக்களில் இதுவுமொன்று.
என்னை எவ்விதத்திலும் கவரவில்லையென்றாலும் நிறைய இரசிகர்கள் இருப்பார்களென்பதால் இதை இங்குப் பதிவாக்குகிறேன்.

இந்த rap ஐ என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
வன்னியில் இசைப்பிரியனின் இசையில் இப்படியொரு பாடல் வந்தபோது மூக்கின்மேல் கோபம் வந்தது. ஏனென்று தெரியவில்லை. (டி.சே கொடுக்குக் கட்டுறது தெரியுது. பொறும் ஐசே. உண்மையத்தான் சொல்லிறன்.) சிலவேளை என்போன்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்துகொண்டு, அதற்குமேல் இந்த முயற்சிகளில் இறங்கினால் கோபம் வராதோ என்னவோ?



இவரின் இன்னொரு பாடல் ஞாபகம்

Labels: , ,