சயந்தன் வீட்டுப்பூனைக்கு நடந்தது என்ன?
சயந்தனின் கொடுமை தாங்காமல் அவரின் வீட்டிலிருந்து பூனையொன்று தப்பிச்சென்றது வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 'பூனையின் வாக்குமூலம்' என்ற இடுகையில் பாதிக்கப்பட்ட பூனை தன் வாக்குமூலத்தைப் பதிந்திருந்தது. அங்கிருந்து தப்பிய பூனைக்கு என்ன நடந்தது? அது என்ன செய்கிறது என்று அறிய பலர் ஆவலாயிருப்பீர்கள். எமது துப்பறியும் பிரிவு அப்பூனையைக் கண்டுபிடித்துவிட்டது. அது இப்போது மிகமிக மகிழ்ச்சியாக ஆடிப்பாடி கொண்டாட்டமாக இருக்கிறது. ஒரு கொடுமையாளனிடமிருந்து தப்பித்த மகிழ்ச்சியில் கொண்டாட்டமாக ஆடிப்பாடும் பூனையை மறைந்திருந்து படம்பிடித்தது எமது துப்பறியும்குழு. அந்த காணொளிக் காட்சியை நீங்களும் கண்டுகளியுங்கள். |
Comments on "சயந்தன் வீட்டுப்பூனைக்கு நடந்தது என்ன?"
விழுந்து விழுந்து சிரித்ததில் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் :)))
ஒரு துரோகி என்று சொன்னால் .. நம்பா மாடிங்கள் .. இப்ப அந்தப் பூனையே நிருபித்து விட்டது..
"சயந்தன் ஒரு துரோகி என்று சொன்னால் .. நம்பா மாடிங்கள் .. " இப்ப அந்தப் பூனையே நிருபித்து விட்டது..
என்னைய்யா.. நடக்குது
அங்கே சின்னக்குட்டி துப்பறிந்த வீடியோவில் அது ஒரு கறுப்பு வெள்ளைப் பூனையுடன் இணைந்து ரிவி (டிவி) பார்த்துக்கொண்டிருக்கிறது.
இங்கே கொண்டாட்டம் என குத்தாட்டம் போடுகிறது. நான் எதை நம்ப..? உண்மை என்ன..?
நான் அப்பவே சந்தேகப்பட்டேன். தப்பியது என்ன ஆச்சுன்னு. நல்ல வேலை.
படம் பிடித்து காட்டுனீங்க!
ப்ளூ க்ராஸ்ல சொல்லி சயந்தன் மேல வழக்கு போடலாமான்னு ரோசனையில இருந்தேன்.
அதை தற்காலிகமாக கை விட்டுட்டேன்.
:)))))))))))
(சிரிப்பை அடக்க முடியல சாமீ)
அரோகரா வசந்தனுக்கு அரோகரா
garfield என்ற கிராபிக்ஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி நல்ல மீள்கலவை தரவிறவிக்கி வைத்து மருமக்களும் நானும் கேட்டுகேட்டு ஆட வைத்துட்டியள் எனது மருமகன் சொன்ன வார்த்தை "so funny""
//"so funny""//
மருமகனுக்குச் சொல்லவும்.. இது பண்ணி இல்லை. பூனையெண்டு
நல்லாக் கொண்டாட்டமாத் தான் ஆடுது.. ஆனா, இருப்பிடம் சொல்லமாட்டேன்னு பூனைகிட்ட சொல்லிட்டு இப்படி சோபனா வீட்ல இருக்குன்னு படத்துலயே போட்டுக் கொடுத்துட்டீங்களே.. சயந்தன் வேற பார்த்துட்டார்.. இனி பூனைக்கு என்ன ஆவப் போகுதோ..
:;))))
கோவைமணி, தமிழ்மகன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சயந்தன்,
எது உண்மையாக உம்முடைய பூனையெண்டு உமக்கு வடிவாத் தெரியும்தானே?
பாலபாரதி,
வருகைக்கு நன்றி.
//சயந்தன் வேற பார்த்துட்டார்.. இனி பூனைக்கு என்ன ஆவப் போகுதோ..//
பொன்ஸ்.. பூனைக்கு பொது மன்னிப்பு வழங்கிட்டன். எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும். :)
ஆடுறா ராமா.. ஆடுறா ராமா
அடியேய்... முத்தழகு என்ன புள்ள இது கெட்ட ஆட்டம்? எல்லாரும் பாக்குறாங்க புள்ள.. வேணாம் புள்ள.. ஆட்டத்த நிப்பாட்டு... வேணாம் புள்ள ... சொல்லிபுட்டன்... அம்புட்டுதா வீட்டுக்கு போகலாம் வா முத்து... ஏலே அழகு.. முத்துதுதுது.....
தமிழ்பித்தன்,
நன்றி நன்றி நன்றி.
உம்மட மருமோளின்ர குரலை நீர் கொழுவிக்காகப் போட்ட 'என்கிட்ட மோதாதே' பாட்டில கேட்டேன். நல்ல குரல்.
அவவும் உம்மோடையோ இருக்கிறா?
பொன்ஸ்,
மன்னிப்புக் குடுத்திட்டன் எண்டு சொன்னாலும் அவர் சோபனா வீட்டுக்கெல்லாம் போகமாட்டார். போனா வீட்டில நடக்கிறதே வேற.
பருத்திவீரன்,
வருகைக்கு நன்றி.
இப்படி ஒரு நடனத்தை நான் பார்க்கவேயில்லை...ஆகா..
ஆகாஅஆஅஅஆஆஅஆஆஅஆ
This comment has been removed by a blog administrator.
அ(ஆ)ட அ(ஆ)ட அ(ஆ)ட... தூள் கிளப்பீட்டீங்கள் போங்க...
சயந்தனின் பூனைக்கு இப்படி ஒரு திறமையா///

ஓய்!
அங்க குழவி தான்தான் ஏதோ கண்டுபிடிச்சமாதிரி ஒரு படம் காட்டிக்கொண்டு நிக்குது.
போய் என்னெண்டு கேளும்.