நாங்களும் கடற்கரை போனோம் - பாகம் ஒன்று
நேற்று (27.12.2007) நாங்கள் கடற்கரையொன்றுக்குப் போனோம். மெல்பேணிலுள்ள மிகப்பிரபலமான st. Kilda Beach க்குத்தான் போனோம். எடுத்த படங்களெல்லாவற்றையும் வெளியிட முடியாததால் இரண்டொரு படங்களை மட்டும் வெளியிடுகிறோம். மக்களைக் கிட்டவாகக் காட்சிப்படுத்தியவற்றைத் தவிர்த்து, தூரத்தில், ஒருமுனையில் நிற்கும் சிலரைக் காட்சிப்படுத்திய படமிது. கடற்குளித்துக் கரைதிரும்பும் ஒருவர். மனம் கேட்காமல் இன்னொரு படம். ![]() ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இவ்விடுகையில் இருக்கும் நீதிகள்: நீதி ஒன்று: மெல்பேணிலும் அழகான கடற்கரைகளுள்ளன; ஏராளமான மக்கள் நாளாந்தம் வந்து போகிறார்கள். நீதி இரண்டு: 'கனியிருப்ப காய்கவர்ந்தது போல' கடற்கரை பார்க்க இஞ்சயிருந்து ஆயிரம் கிலோமீற்றர்கள் தாண்டிப்போய் கடற்கரையில படுத்துக்கிடந்து (கடலுக்க இறங்கி உடம்பை நனைச்சாலும் பரவாயில்லை; மணலில இருந்து விடுப்புப் பாக்க என்ன கோதாரிக்கு இவ்வளவு தூரம் போகோணுமெண்டது எனக்கின்னும் விளங்கேல) எழும்பிவாறதுக்கு உண்டான கொழுப்பு இந்த வெயிற்காலத்தோடயாவது கரையக்கடவது. **** சிட்னிக் கடற்கரை மெல்பேணிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீற்றர்கள். **** விளங்கப் புத்தியுள்ளவன் விளங்கட்டும். **** தொடர்பற்ற ஆக்கள் குறுக்குச் சூடுகளுக்க ஆப்பிட வேண்டாம். Labels: உட்குத்து, படம், பதிவர் வட்டம் |
Comments on "நாங்களும் கடற்கரை போனோம் - பாகம் ஒன்று"
//நீதி ஒன்று: மெல்பேணிலும் அழகான கடற்கரைகளுள்ளன; ஏராளமான மக்கள் நாளாந்தம் வந்து போகிறார்கள்.//
நீதி ஒன்றுக்கான கேள்வி: அப்ப என்ன கோதாரிக்கு சிட்னிக்கு வந்தவங்கள்?
//நீதி இரண்டு: 'கனியிருப்ப காய்கவர்ந்தது போல' கடற்கரை பார்க்க இஞ்சயிருந்து ஆயிரம் கிலோமீற்றர்கள் தாண்டிப்போய் கடற்கரையில படுத்துக்கிடந்து (கடலுக்க இறங்கி உடம்பை நனைச்சாலும் பரவாயில்லை; மணலில இருந்து விடுப்புப் பாக்க என்ன கோதாரிக்கு இவ்வளவு தூரம் போகோணுமெண்டது எனக்கின்னும் விளங்கேல) //
நீதி இரண்டுக்கான கேள்வி: நான் சிட்னிப் பதிவில் இடாத விஷயங்களைச் சொன்ன அந்த றோ புலநாய்வு ஆள் ஆர்?
கடற்கரையில் எடுக்கும் போது ஒரு செட்டிங் இருக்குமே ? அதை வைத்து எடுத்தால் முகத்தில் விழும் கருமையை தவிர்த்திருக்கலாம்.
அந்த ஆங்கில-தமிழ் பெட்டியில் போட்டு சரி என்று அடித்தால் பிழை என்று வருகிறது பாருங்கள்.
//
Blogger கானா பிரபா said...
நீதி ஒன்றுக்கான கேள்வி: அப்ப என்ன கோதாரிக்கு சிட்னிக்கு வந்தவங்கள்?
//
என்னண்ணை, பிளேட்டைத் திருப்பிறியள்?
உதே கேள்வியைத்தானே நானும் என்ர இடுகையில கேட்டிருக்கிறன்.
//
நீதி இரண்டுக்கான கேள்வி: நான் சிட்னிப் பதிவில் இடாத விஷயங்களைச் சொன்ன அந்த றோ புலநாய்வு ஆள் ஆர்?//
உங்கள் மூண்டுபேரில ஓராளாத்தான் இருக்கும்.
வசந்தன்!
3 ம் படம் என்ன? இப்படிக் காஞ்சு கிடக்குது...
தேர்த் திருவிழாபோல் கிடக்குமென நினைச்சேன்...
முதற் படம் நல்ல அழகாக எடுக்கப்பட்டுள்ளது.
வடுவூர் குமார்,
வருகைக்கு நன்றி.
இனித்தான் கமராவைப் பற்றி ஆராய வேணும். ஆனால் அங்கு எடுத்த பலபடங்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன. அவற்றை வெளியிட விரும்பாததால்தான் இவற்றை வெளியிட்டேன்.
பின்னூட்டப்பெட்டி பற்றின உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களின் பின்னூட்டம் பார்த்தபின்புதான் இதைக் கவனித்தேன். புளொக்கர் சேவையின் ஏதாவது மாற்றம்தான் இந்தப்பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும்.
தனியே இந்த வலைப்பதிவிலன்றி, இந்நிரல் பயன்படுத்தப்படும் ஏனைய வலைப்பதிவுகளிலும் இதே பிரச்சினை வருகிறது.
இப்போதைக்கு எழுத்துருவை மாற்றிப் படியெடுத்து வைத்துக்கொண்டு, வழமையான முறையில் பின்னூட்டமிட வேண்டியதுதான்.
யோகன் பாரீஸ்,
உங்களுக்காக தேர்த்திருவிழா போன்ற கடற்கரைக்குப் போய் படமெடுத்துப் போட்டிருக்கிறன் அடுத்த இடுகையில.
//வடுவூர் குமார் said...
கடற்கரையில் எடுக்கும் போது ஒரு செட்டிங் இருக்குமே ? அதை வைத்து எடுத்தால் முகத்தில் விழும் கருமையை தவிர்த்திருக்கலாம்.//
அண்ணா வடுவூர் குமார் பானையில் இருந்தாத்தான் அகப்பையில வரும்..... என்னதான் செட்டிங் போட்டு எடுத்தாலும் அந்த நபர் இப்படித்தான் தெரிவார்...
//கானா பிரபா said...
//நீதி ஒன்றுக்கான கேள்வி: அப்ப என்ன கோதாரிக்கு சிட்னிக்கு வந்தவங்கள்?//
நீதி ஒன்றுக்கு கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் : அந்த கேள்வியை வந்த திரு.தெ...ன், திரு.கே..ன், திரு.பி..ப் ஆகியேரிடம் கேளுங்கள் பதில் சொல்வார்கள்....(பெயரை நான் வெளியிடவில்லை)
//நீதி இரண்டுக்கான கேள்வி: நான் சிட்னிப் பதிவில் இடாத விஷயங்களைச் சொன்ன அந்த றோ புலநாய்வு ஆள் ஆர்?//
நீதி இரண்டுக்கு கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்: மெல்பொனில் இருந்து வந்த 3 நண்பர்களில் ஒருவர்.... வசந்தன் அண்ணாவை விட தெளிவா பதில் தந்து இருக்கிறேன் இனி அந்த நபரை போனில் பிடிச்சு விளாசுங்கோ வேலை முடிஞ்சுது....
//திரு.தெ...ன், திரு.கே..ன்,//
அடடே.. நம்மாளுக..
உவர் வசந்தன் பாகம் 1, 2 எண்டு போட்டபிறகு தான் விளங்குது அவை ஏன் இங்கை வந்தவை எண்டு. ஊர் வண்ணாத்திக்குளம் மாதிரி ஒரு கடற்கரையை வச்சுக்கொண்டு பாலச்சந்தர் ரேஞ்சில பாகம் போட்டுக் காட்டுறார் ;)
//
//திரு.தெ...ன், திரு.கே..ன்,//
அடடே.. நம்மாளுக..//
ஆஹா சயந்தன் அண்ணா கண்டு பிடிச்சுட்டார்.... எனக்கு ஆப்பு வைக்காமல் இருந்தால் சரி..... பிறகு திரு.தெ...ன், திரு.கே..ன் இரண்டு பேரும் எனக்கு சுத்தி சுத்தி அடிப்பினம்