வன்னியின் வனப்பு
இதோ இது என்ன இடமென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?![]() ஆனையிறவு. இந்தப்பெயரை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இராணுவத்தின் பிடியில் அது இருந்தபோது அதன்வழியால் சென்றுவந்தவர்களின் அனுபவங்கள் அவ்வளவு நன்றாக இருக்காது. அது புலிகளால் மீட்கப்பட்டபின்பு கூட அந்தப் பகுதியாற் சென்று வந்தவர்களுக்கு வெறும் வெட்டையும் சுட்டெரிக்கும் வெயிலும் மட்டுமே ஞாபகமிருக்கும். ![]() ஆனால் அதையெல்லாம் தாண்டி அந்த மண்ணில் இயற்கை அழகைப் படம்பிடித்துள்ளார்கள். ஆனையிறவுக்குள்ளால் சென்று வந்தவர்களுக்கு இப்படங்கள் ஆச்சரியமாயிருக்கலாம். இப்படியெல்லாம் அழகானதா ஆனையிறவு? என்று வியப்பதைவிட, இப்படியெல்லாம் கூட அந்த இடத்தை அழகாகப் படமெடுக்க முடியுமா என்றே எனக்கு வியப்புத் தோன்றுகிறது. ![]() இப்படத்தைப் பார்த்துவிட்டு ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். ஆம். பிறநாட்டுப் பறவைகள் வந்து 'பார்த்து விட்டுப் போகிறதாம்' ஆனையிறவை. (இறுதிப்படத்தில் 'ஆணை'யிறவென்று எழுதியிருந்தாலும் அது ஆனையிறவு தான்.) அதைப் பார்க்கத்தான் கொடுத்து வைக்கவில்லை. இப்படங்கள் போராளிகளால் எடுப்பட்டு அவர்களின் புகைப்படப்பிரிவு இணையத்தளமான அருச்சுனாவில் தொகுப்பட்டுள்ளன. அவற்றிற் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பு: இன்று ஆனையிறவு உப்பளம் மிகப்பெருமெடுப்பில் தொழிற்படுகிறது.வன்னியின் மிகமுக்கிய ஏற்றுமதியாக உப்புற்பத்தி விளங்குகிறது. |
Comments on "வன்னியின் வனப்பு"
ey;y glq;fs;.
ed;wp.
//இப்படியெல்லாம் அழகானதா ஆனையிறவு? என்று வியப்பதைவிட,
இப்படியெல்லாம் கூட அந்த இடத்தை அழகாகப் படமெடுக்க முடியுமா என்றே எனக்கு வியப்புத் தோன்றுகிறது.//
அதேதான் எனக்கும் தோன்றியது.
-சீலன்-
ஆனையிறவு - வன்னியா யாழ்ப்பாணமா?
படத்தில் யாழ்ப்பாணம் என்று போட்டிருக்கிறதே?
விளங்காதவன்.
//ஆனையிறவு - வன்னியா யாழ்ப்பாணமா?
படத்தில் யாழ்ப்பாணம் என்று போட்டிருக்கிறதே//
யாழ் குடா நாட்டையும் இதரபகுதிகளையும் பிரிக்கும் இடம் ஆனையிறவு.
நிர்வாக, மற்றும் இலங்கையின் தேர்தல் மாவட்டத்தில் வன்னி என்றால் முல்லைதீவு, மன்னார், வவுனியாவைத்தான் குறிக்கும்.
ஆனால் இப்போது கிளிநொச்சியும் வன்னியாக அழைக்கப்படுகிறது.
வ்சந்தன் உண்மையில் படங்கள் அருமை
நன்றி குழைக்காட்டான்.
ஆனையிறவு யாழ்மாவட்டந்தான். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை வன்னி என்று நோக்கிய மனநிலை, ஆனையிறவையும் வன்னியென்று நினைக்க வைத்துவிட்டது.
படத்திற்கூட அது யாழ்ப்பாணம் என்றுதான் போட்டிருக்கு.
படங்களுக்கும் பட இணைப்புக்கும் நன்றி வசந்தன்.
......
நானும் ஆனையிறவுக்குச் சென்ற சமயம் சில படங்கள் எடுத்திருந்தேன். ஆனால் உது மாதிரி வடிவாய் எல்லாம் வராது. ஆகாய கடல் வெளிச்சமருக்காய் தொண்ணூறுகளில் புறப்பட்டுப்போன பவள்(?) வாகனமும் இன்னும் அங்கே நின்றது ஞாபகம். போராளிகளால் வடிவமைக்கப்பட்ட அந்த வாகனத்தை நொறுக்கமுடியாது கடைசியாக ஒரு இராணுவத்தினன் மேலால் இறங்கி கிரனேட் எறிந்துதான் சேதமாக்கினான் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.
.......
பதிவோடு சேராத ஒரு குறிப்பு. அருச்சுனா புகைப்படக் கலையகம், எழுத்தாளர் எஸ்.பொவின் மகன் நினைவாக தொடங்கப்பட்டது. எஸ்.பொவின் மகன் மித்ர (அருச்சுனா)நல்லதொரு படப்பிடிப்பாளர். யாழில் இருந்த ஸ்ரான்லி வீதி கூட இவரை நினைவுகூரத்தான் அருச்சுனா வீதி என்று பிறகு மாற்றப்பட்டது.
பின்னூட்டத்துக்கு நன்றி.
அந்த கவசவாகனத்தின் அருகில் ஒரு கல்வெட்டு இருக்கிறது கவனித்தீர்களா?
அதுதான் குண்டெறிந்து பின் இறந்துபோன அச்சிப்பாயின் நினைவாகக் கட்டப்பட்ட கல்வெட்டு.