Wednesday, September 21, 2005

பனைவேலி

யாழ்ப்பாணத்தில் பனைகள் ஏராளமாயிருந்தன. (இப்போது இல்லை. ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.) ஆனால் எங்குமே சீரானமுறையில் வரிசையாக நட்டுவளர்த்த பனைமரங்களை நான் பார்த்ததில்லை. எல்லாமே தன்பாட்டுக்கு வளர்ந்தவை தாம்.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் "2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இரண்டுகோடிப் பனைகள்" என்ற திட்டத்தை விடுதலைப்புலிகள் முன்வைத்தார்கள். அதன்படி தமிழீழப்பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தால் அங்காங்கே ஆயிரக்கணக்கில் பனம்விதைகள் நடப்பட்டு அவை பராமரிக்கப்பட்டன. (அதுக்கென்ன பெரிய பராமரிப்பு. முளைக்காத விதைகளை அகற்றி புதுசா விதைக்கிறதுதான்).

யாழ்.வல்வை வெளியில் இப்படி ஆயிக்கணக்கான விதைகள் நடப்பட்டன. அதேபோல் கல்லுண்டாய் வெளியிலும் ஆயிரக்கணக்கான விதைகள் நடப்பட்டன. அவை முளைத்து சிறுவடலியாக இருந்தபோது பார்த்தேன். அப்போதுதான் நான் வரிசைக்கிரமத்தில் நடப்பட்டிருந்த பனங்காணியை முதன்முதற் பார்த்தேன்.

வன்னிக்கு வந்தபோது வேலியில் கதியால்களுக்குப் பதிலாக பனைகள் நிற்பதைக் கண்டபோது சிரிப்புத்தான் வந்தது. நல்ல நேர்த்தியாக வளர்ந்திருக்கும். இதோ அப்படி பனைகள் வேலியாக நிற்கும் படமொன்றைப் பாருங்கள். இது முல்லைத்தீவிலுள் முள்ளியவளைக் கிராமத்திலெடுத்த படம்.



எனக்கு இதைப்பார்த்து ஒரு ஞாபகம் வந்தது. இப்படி பனைகளை நட்டுவிட்டால் கதியால் அரக்கிற சண்டை வராதெல்லோ?
யாழ்ப்பாணத்தில எங்கயாவது இப்பிடி வேலியடைக்கப்பட்டிருந்தால் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ.

இதோ முள்ளயவளையின்ர மேலதிக படங்கள் சில.


Comments on "பனைவேலி"

 

Anonymous Anonymous said ... (September 21, 2005 4:27 PM) : 

//இப்படி பனைகளை நட்டுவிட்டால் கதியால் அரக்கிற சண்டை வராதெல்லோ?//

;-))

 

Anonymous Anonymous said ... (September 21, 2005 5:43 PM) : 

கதியால் அரக்கிற சண்டை வராது, பனை உனக்கோ, பனங்கொட்டை உனக்கோ எனக்கோ எண்டு சண்டை வரும்

:)

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (September 22, 2005 11:46 PM) : 

//கதியால் அரக்கிற சண்டை வராது, பனை உனக்கோ, பனங்கொட்டை உனக்கோ எனக்கோ எண்டு சண்டை வரும் //

அதுவும் சரிதான்.

 

Blogger பாலதர்ஷன் said ... (October 01, 2005 12:42 AM) : 

எல்லை அரக்கிற பிரச்சனை பெரியபிரச்சனையா போச்சு!

 

Blogger Thangamani said ... (October 01, 2005 6:13 AM) : 

எனக்குப் பனை மரங்களை மிகவும் பிடிக்கும்.

 

Blogger Unknown said ... (October 03, 2005 9:33 PM) : 

எங்கூர்ல தெளிவா இந்த எல்லைப் பிரச்சனைய தீர்க்கரதுக்குன்னே, எந்த மரமா இருந்தாலும் இப்படி வரிசயாத்தான் நடுறது.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (October 25, 2005 11:09 AM) : 

This comment has been removed by a blog administrator.

 

Anonymous Anonymous said ... (October 08, 2006 1:57 AM) : 

எழுதிக்கொள்வது: johan- paris

வசந்தன்!
நல்ல விசயம் 2 கோடி பனைத் திட்டம் மிகவரவேற்கத்தக்கது. இந்தப் பதிவிலுள்ள படங்கள் எதுவும் எனக்கு வரவில்லை. தனி மின்னஞ்சல் எனக்கிட முடியுமா??
யோகன் பாரிஸ்

17.47 7.10.2006

 

Anonymous Anonymous said ... (October 08, 2006 1:57 AM) : 

எழுதிக்கொள்வது: johan- paris

எழுதிக்கொள்வது: johan- paris

வசந்தன்!
நல்ல விசயம் 2 கோடி பனைத் திட்டம் மிகவரவேற்கத்தக்கது. இந்தப் பதிவிலுள்ள படங்கள் எதுவும் எனக்கு வரவில்லை. தனி மின்னஞ்சல் எனக்கிட முடியுமா??
யோகன் பாரிஸ்

17.47 7.10.2006

17.47 7.10.2006

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (October 08, 2006 4:56 PM) : 

யோகன் பாரீஸ்,
வருகைக்கு நன்றி.

உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் இந்தப் பின்னூட்டத்திலயே போட்டிருக்கலாமே?

 

post a comment