Tuesday, October 04, 2005

காசு கொடுத்து ஆசை தீர்த்தல்

இங்கே கடந்த ஞாயிறன்று super market க்குச் சென்றபோது ஓரிடத்தில் கூட்டம் நின்றது. உடன பூந்து பாத்தா 'நடு விறாந்தையில்' பட்டியொன்று அடைச்சு, அதுக்குள்ள ஆடுகள் கோழிகள், வாத்துக்கள் எண்டு கொஞ்சத்தை அடைச்சு வச்சிருக்கினம். அதுகள் மட்டுமில்ல கொஞ்ச குழந்தைப்பிள்ளையளும் அந்தப் பட்டிக்குள்ள நிக்குதுகள். பட்டிக்கு வெளியில தாய்தேப்பன் நிண்டு பாத்துக்கொண்டிருக்குதுகள். குழந்தைகள் பிராணிகளுக்குச் சாப்பாடு குடுக்கிறதும் அதுகளத் தடவிக்கொண்டிருக்கிறதுமாய் இருக்குதுகள்.



பட்டிக்கள்ள போக ரெண்டு டொலர், ஒரு சாப்பாட்டுப்பொட்டலம் (பிராணிகளுக்குத்தான்) அரை டொலர் எண்டு யாவாரம் நடக்குது. குழந்தைகள் சாப்பாட்ட வில்லண்டமாத் தீத்தினாலும் அதுகள் சாப்பிடுதுகளில்ல. எவ்வளவெண்டு தான் அதுகளும் சாப்பிடுறது?

அண்டைக்குக் குழந்தைப்பிள்ளையளுக்கு நல்ல பொழுதுபோக்கு. எங்கட ஊரிலயெண்டா காசு குடுக்காமலே அத்தனையும் கிடைக்கும். இஞ்ச காசு குடுத்து அனுபவிக்க வேண்டிக்கிடக்கு. அதுவும் குழந்தைகளுக்கு மட்டுந்தானாம். நானும் ரெண்ட டொலர் குடுத்து பட்டிக்குள்ள போய் விளையாடுவமெண்டா என்னோட வந்த ஆக்கள் விடேல. அது குழந்தைகளுக்குத்தானாம். அட காசு குடுத்தாலும் கிடைக்காத அனுபவங்கள் இதுகள்.




நான் படமெடுக்கேக்க ஒரு மாதிரிப் பாத்தாங்கள். அவசரத்தில படங்களொண்டும் ஒழங்கா வரேல. மின்கலமும் மட்டுமட்டாப்போச்சு. படத்துக்குக் குறைநினையாதையுங்கோ.

Comments on "காசு கொடுத்து ஆசை தீர்த்தல்"

 

Blogger Thangamani said ... (October 04, 2005 3:52 PM) : 

intha nadai nadai nallarukku vasanthan

 

Blogger ilavanji said ... (October 04, 2005 5:13 PM) : 

சர்க்கரையில்லா ஊருல இலுப்பைபூதான் சர்க்கரை... இருந்தாலும் இது இளநீரை டெட்ராபேக்குல குடிக்கறமாதிரிதான்!

அதுசரி.. தலைப்பை ஏனைய்யா இப்படி வில்லங்கமா வச்சிருக்கீரு?! உமக்கும் ஒரு பிரஸ்மீட் போட்டு பொதுமன்னிப்பு கேக்க ஆசையா??

 

Blogger நளாயினி said ... (October 04, 2005 5:41 PM) : 

இது இது உது உது அது அது எல்லாம் ஒரே நல்ல அஃகிறிணையில். நல்ல மொழிவளம்.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (October 04, 2005 8:23 PM) : 

நன்றி தங்கமணி.
இளவஞ்சி,
அது "ஆலையில்லா ஊருக்கு" எண்டெல்லோ நினைச்சன்.
அட நீங்கள் சொன்ன பிறகுதான் தலைப்பு விவகாரமாயிருக்கிறது தெரியுது;-0

நளாயினி,
நீங்கள் சொன்ன பிறகுதான் பாத்தன், தாய்தேப்பனக்கூட அஃறிணையாத்தான் பாவிச்சிருக்கிறன். போகட்டும். பேச்சு வழக்கில அவையளெல்லாம் அஃறிணைதானே?

 

Blogger நளாயினி said ... (October 04, 2005 8:42 PM) : 

ஓ அப்படியா--- நீங்க சொன்னதும் தான் ஞாபகம் வருது.--....... ஏன் தான் இப்படி எல்லாம் ஞாபகப்படுத்திறியளோ தெரியேலை -- குலம் அறிந்து பொண்ணு கொடு பாத்திரம் அறிஞ்சு பிச்சைகொடு. சும்மாவா சொல்லியிருப்பினம் இந்த பழமொழிகள் பற்றி எனக்கு வந்த சந்தேகம் தான் உங்களிடம் கேட்டு தெரிஞ்சு கொள்ளலாமே என்று தான். இது பற்றி ஏதும் தெரிஞ்சா உங்கடை அஃறிணைப்பாசையில் சொல்லுங்களன் கேட்டு தெரிஞ்சு கொள்ளுறன்.

 

Blogger Unknown said ... (October 05, 2005 12:41 AM) : 

காசு கொடுத்து ஆடு, மாட்டுக்கு சாப்படச் சொல்றிங்க., ஒரு பூ வைக்கலாம்னா மண்ண $ கொடுத்து வாங்கணும்., என் பெண்ணை பள்ளியில் சேர்க்கப் போனபோது., பள்ளிக் கட்டண விவரங்கள் அடங்கிய தாள் ஒன்றை கொடுத்தார்கள். அதில் பள்ளிக்கு வகுப்புவாரியான கட்டணங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. இத்துடன் பள்ளி நேரத்திற்கு முன், பின் ஆன நேரங்களுக்கான கட்டணம் கொடுக்கப் பட்டிருந்தது. நம்ம புள்ள., சின்னப் புள்ள கட்டணம் சரி., ஆனா 6வது கிரேட்ல இருந்து 10 வது கிரேட் வரைக்கும் கட்டணம் இல்லை எனப் போட்டிருந்தது. விட்டா அதுக்கும் வாங்கிருவாய்ங்க போல., அதுக பாட்டுக்கு வந்து கிரவுண்ட்லயோ விளையாண்டுட்டோ., வராண்டாவுல உக்கார்ந்து படிச்சிட்டோ இருந்திட்டுப் போகுதுக (உங்க நடையப்பா., வசந்தன்). 'Free'ன்னு எதப்போட்டு ஏமாத்தறதுன்னு இல்ல?.

 

Blogger SnackDragon said ... (October 05, 2005 12:59 AM) : 

:-))

 

Anonymous Anonymous said ... (October 05, 2005 1:17 AM) : 

வசந்தன்
தலைப்பை பார்த்து பயந்து போனன்.
வசந்தனுக்கு என்ன நடந்த்து என்று?
மற்றம்படி பதிவு ஓ.கே

 

post a comment