"சிஞ்சா மனுசி" ஒலிப்பதிவுக் கலையகம் அறிமுகம் - ஒலிப்பதிவு
யாருக்கும் தெரியாமல் புதிய ஒலிப்பதிவுக் கலையகமொன்றை ஒருவர் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் 'சிஞ்சா மனுசி' யாம். அதன் பரீட்சார்த்த ஒலிப்பதிவுகளையும் செய்துகொண்டிருக்கிறார். விரைவில் பெருமெடுப்பில் இசையமைப்பு, பாடல் ஒலிப்பதிவு என்பவற்றைச் செய்ய இருக்கிறார். வெளிவரவிருக்கும் அவரது பாட்டுத்திரட்டொன்றில் இடம்பெறும் சிறு ஒலித்துண்டொன்று தற்செயலாக எனக்குக் கிடைத்தது. அதிகாரபூர்வமற்ற முறையில் அக்கலையகத்தையும் அச்சிறு ஒலித்துண்டையும் இங்கே அறிமுகம் செய்கின்றேன். பாடலைப் பாடுவது யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா? சற்றுமுன் கிடைத்த தகவற்படி அந்நபர் பாடல்வரிகளுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. சரியான முறையில் பாடல்வரிகள் அமையாத அதிருப்தியில் அவர் இருக்கிறார். யாராவது பாடல் எழுதித்தந்தால் இசையமைத்துப் பாடலாக்கலாம் என்று விரும்புகிறார். எனவே எழுதத் தெரிந்த யாராவது அவருக்குப் பாடலெழுதிக் கொடுத்தால் நன்று. ஒலிப்பேழை தொழிற்படாவிட்டால் இங்கே அழுத்துங்கள். தானாகத் தொழிற்படும். |