Tuesday, March 14, 2006

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது



இத்தலைப்பு ஈழத்துப் பாடலொன்றின் வரிகள்.

பி.பி.சி செய்திச்சேவை உலகளாவிய ரீதியில் நடத்திய சிறந்த பத்துப்பாடல்களுக்கான போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பெற்றது இப்பாடல். (நான்காவது 'ராக்கம்மா கையத்தட்டு').

யுத்தத்தின் போதான இடப்பெயர்வின் வலியைச் சொல்லும் இப்பாடல் ஆழமான தாக்கத்தைத் தரும்.

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகுமிடம் தெரியாமல் - இங்கு
சாகும்
வயதினில் வேரும் நடக்குதே
தங்குமிடம் தெரியாமல்
கூடு கலைந்திட்ட குருவிகள் -
இடம்
மாறி நடக்கின்ற அருவிகள்.

விரும்பினால் முதல் முப்பது வினாடிகளையும் இங்கே கேட்டுப்பாருங்கள்.
முழுப்பாடலும் கிடைத்தால் பின்னொரு பதிவாகப் போடுகிறேன். அல்லது கிடைப்பவர்கள் அப்பாடலைத் தரலாம்.
***********************************
பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்: திருமலைச் சந்திரன்.
***********************************
பாடல்: உதவி: பிபிசி இணையத்தளம்.
படம்: வன்னியிலிருந்து ஒருவர்

Monday, March 06, 2006

மூன்றுகுலை ஈன்ற வாழை.

வன்னி-கிளிநொச்சியில் ஒரு வாழைமரம் மூன்று வாழைக்குலைகளை ஈன்றுள்ளது.
சாந்தபுரம் கணபதி சத்தியசீலனின் வாழத்தோட்டத்திலேயே இவ்வதிசயம் நிகழ்ந்துள்ளது.
படங்களைப் பாருங்கள்.





(உவங்களோட பெரிய அரியண்டம். எல்லாப்படத்திலயும் தங்கட பேரைப்போட்டு வச்சிருக்கிறாங்கள்.)

நன்றி: சங்கதி.