பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
![]() இத்தலைப்பு ஈழத்துப் பாடலொன்றின் வரிகள். பி.பி.சி செய்திச்சேவை உலகளாவிய ரீதியில் நடத்திய சிறந்த பத்துப்பாடல்களுக்கான போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பெற்றது இப்பாடல். (நான்காவது 'ராக்கம்மா கையத்தட்டு'). யுத்தத்தின் போதான இடப்பெயர்வின் வலியைச் சொல்லும் இப்பாடல் ஆழமான தாக்கத்தைத் தரும். பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது விரும்பினால் முதல் முப்பது வினாடிகளையும் இங்கே கேட்டுப்பாருங்கள். முழுப்பாடலும் கிடைத்தால் பின்னொரு பதிவாகப் போடுகிறேன். அல்லது கிடைப்பவர்கள் அப்பாடலைத் தரலாம். *********************************** பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை. பாடியவர்: திருமலைச் சந்திரன். *********************************** பாடல்: உதவி: பிபிசி இணையத்தளம். படம்: வன்னியிலிருந்து ஒருவர் |