வான் பாய்கிறது இரணைமடு
வன்னியின் மிகப்பெரிய குளம் இரணைமடு. இப்போது அங்குப்பெய்யும் கடும் மழையால் அக்குளம் நிரம்பிவிட்டது. கடந்த இருநாட்களாக அக்குளம் வான்பாய்ந்துகொண்டிருக்கிறது. அத்துடன் அக்குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பெருமளவு நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இனி அதுகுறித்தான செய்திகளுடன் படங்களும். ______________________ கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து நொடிக்கு 13,150 கன அடிநீர் வெளியேறிக் கொண்டிருப்பதாக நீர்பாசனத் திணைக்களத்தினர் தெரிவித்தனர். பல வருடங்களின் பின் இரணைமடுக்குளம் வான் பாய்வதும் குறிப்பிடத்தக்கது. இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றுப் பிற்பகல் இரண்டு மணிவரை 34 அடி 9 ½ அங்குலம் நீர் நிறைந்துள்ளது. ![]() குளத்தின் இடதுகரை வான்கதவுகள் ஐந்தும் நான்கு அடியும், வலதுகரை வான்கதவுகள் முழுமையாகவும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ½ அங்குலம் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றது. வான்கதவுகள் பதினொன்றினூடாகவும் அதைவிட வான்பாய்வதன் மூலமும் நொடிக்கு 13,150 கன அடிநீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றது. ![]() படங்களும் செய்தியும்: புதினம். தமிழ்ப்பதிவுகள் |