திருமண வாழ்த்து
பெரும் எதிர்பார்ப்புக்கும் ஆர்ப்பாட்டங்களுக்குமிடையில் ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்துவிட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.06.2006) சிட்னியில் கோலாகலமாக அத்திருமணம் நடந்தது. அண்மைக் காலமாக பரபரப்பாகப் பேசப்பட்ட திருமணம் அது. புகழ்பெற்ற திரைப்பட நடிகை Nicole Kidman க்கும் Keith Urban க்கும் நடைபெற்ற திருமணத்தைப்பற்றியே இங்கு எழுதுகிறேன். ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் தனது 39 ஆவது வயதைப் பூர்த்திசெய்தவர் கிட்மன். இத்தம்பதியர் நீடூழி வாழ எனது வாழ்த்து. ****************************** இத்திருமணத்தில் எனக்கு தனிப்பட்டதொரு மகிழ்ச்சியுண்டு. என்னையும் Nicole Kidman ஐயும் இணைத்துக் கிசுகிசு எழுதியவர்களின் வாய் இதன்மூலம் அடைக்கப்பட்டுள்ளது. விரைவில் இன்னொரு திருமணத் தகவலோடும் வாழ்த்தோடும் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம்கூறி விடைபெறுகிறேன். |