வாழ்க்கையோட்டம்
![]() படஉதவி: கருணா. இடம்: வன்னி |
கைத்தொலைபேசியில் அவசரமாக எடுத்தது. வெளியிடும் தரத்தில் இல்லை. ஆனால் ஓர் அரசியலுக்காக இடலாமென்று நினைத்ததால் படத்தை வெளியிடுகிறேன். ("இதுதான் 'சால்ஜாப்பு' எண்டு ஆரேன் சொல்ல வாறியளோ?") Labels: படம் |
இலங்கை நிலைவரம் பற்றிய சிறு ஒளித் தொகுப்பொன்றை பிபிசி வெளியிட்டுள்ளது. புலிகளின் சில சண்டைக்காட்சிகள், முன்னாள் கண்காணிப்புக் குழுத் தலைவரின் செவ்வி என்பவை உட்பட்ட நான்கு நிமிடத் தொகுப்பை, கீழுள்ள இணைப்பை அழுத்திப் பார்க்கலாம். Link மூதூரில் கொல்லப்பட்ட 16 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பற்றியும் வவுனியாவில் கொல்லப்பட்ட 16 பேரின் சம்பவம் பற்றியும் சிறு ஒளித் தொகுப்பு. Link |
வன்னியில் தயாராகும் 'அம்பலம்' என்ற ஒளித்தொகுப்பு கிழமைதோறும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. சமகால அரசியலைப் பற்றிக் கதைப்பதாக இக்கலந்துரையாடல் இடம்பெறுகிறது. அவற்றின் அரசியற்கருத்துக்களுக்காக மட்டும் என்றில்லாமல் பேச்சுத் தமிழுக்காகவும் பார்க்கலாம். அடிக்கடி பழமொழிகள் சொல்லிக் கதைக்கும (நேரிற் கதைத்தாலும் அப்படித்தான்) தமிழ்க்கவி அம்மாவின் தயாரிப்பில் இடம்பெறுகிறது இந்த 'அம்பலம்' நிகழ்ச்சி. பதிவு வலைத்தளத்தில் கிழமைதோறும் இவ்விணைப்புப் புதுப்பிக்கப்படுகிறது. அதிலேயே தரவிறக்க வசதி செய்து தந்தாலும் இணைப்பு செயற்படவில்லை. எனவே அப்பக்கத்துக்கான இணைப்பை மாத்திரம் இங்குத் தருகிறேன். ஒவ்வொரு கிழமையும் புதிய அம்பலம் வந்தவுடன் அதன் இணைப்பை இங்கு வெளியிடலாம் என்று நினைக்கிறேன். இவ்வார அம்பலம்: 01.09.2006 நன்றி: பதிவு |