பனைவேலி
யாழ்ப்பாணத்தில் பனைகள் ஏராளமாயிருந்தன. (இப்போது இல்லை. ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.) ஆனால் எங்குமே சீரானமுறையில் வரிசையாக நட்டுவளர்த்த பனைமரங்களை நான் பார்த்ததில்லை. எல்லாமே தன்பாட்டுக்கு வளர்ந்தவை தாம். தொன்னூறுகளின் தொடக்கத்தில் "2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இரண்டுகோடிப் பனைகள்" என்ற திட்டத்தை விடுதலைப்புலிகள் முன்வைத்தார்கள். அதன்படி தமிழீழப்பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தால் அங்காங்கே ஆயிரக்கணக்கில் பனம்விதைகள் நடப்பட்டு அவை பராமரிக்கப்பட்டன. (அதுக்கென்ன பெரிய பராமரிப்பு. முளைக்காத விதைகளை அகற்றி புதுசா விதைக்கிறதுதான்). யாழ்.வல்வை வெளியில் இப்படி ஆயிக்கணக்கான விதைகள் நடப்பட்டன. அதேபோல் கல்லுண்டாய் வெளியிலும் ஆயிரக்கணக்கான விதைகள் நடப்பட்டன. அவை முளைத்து சிறுவடலியாக இருந்தபோது பார்த்தேன். அப்போதுதான் நான் வரிசைக்கிரமத்தில் நடப்பட்டிருந்த பனங்காணியை முதன்முதற் பார்த்தேன். வன்னிக்கு வந்தபோது வேலியில் கதியால்களுக்குப் பதிலாக பனைகள் நிற்பதைக் கண்டபோது சிரிப்புத்தான் வந்தது. நல்ல நேர்த்தியாக வளர்ந்திருக்கும். இதோ அப்படி பனைகள் வேலியாக நிற்கும் படமொன்றைப் பாருங்கள். இது முல்லைத்தீவிலுள் முள்ளியவளைக் கிராமத்திலெடுத்த படம். ![]() எனக்கு இதைப்பார்த்து ஒரு ஞாபகம் வந்தது. இப்படி பனைகளை நட்டுவிட்டால் கதியால் அரக்கிற சண்டை வராதெல்லோ? யாழ்ப்பாணத்தில எங்கயாவது இப்பிடி வேலியடைக்கப்பட்டிருந்தால் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ. இதோ முள்ளயவளையின்ர மேலதிக படங்கள் சில. ![]() ![]() ![]() |